மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு
மதிப்புக்குரிய மாவீரர் குடும்ப உறவுகளே! வழமை போன்று இவ் ஆண்டும் “மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு” நிகழ்வு எதிர்வரும் 17.11.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு, எமது மாவீரர் செல்வங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றோம்.
குறிப்பு:- அன்றைய நாள், 24.11.2024 அன்று பிரித்தானியாவின் மத்திய பகுதியில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, 27.11.2024 அன்று உலகத் தமிழர் வரலாற்று மைய வளகத்தில் உள்ள மாவீரர் தூயிலும் இல்லத்தில் ஏற்றப்பட இருக்கும், தேசியக்கொடி உங்களால் தொட்டு வணங்கி கையளிக்கப்பட உள்ளது.
நன்றி.
மாவீரர் பணிமனை உலகத் தமிழர் வரலாற்று மையம்.
தொடர்புகளுக்கு :
07983337797