தமிழீழ மாவீரர் பணிமனை, ஐக்கிய இராச்சியம்

மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள்:

இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்! மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள்.
-தழிழீழ தேசிய தலைவர்

எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டு இருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல.

இந்த வீரர்களின் சாவு, எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக, எமது போரளிகளின் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்க சக்தியாக அமைந்து விட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள், சுகந்திரச் சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள். எமது இனத்தின் சுகந்திரத்திற்காக, சுய கௌரவத்திற்காக, பாதுகப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையளர்கள் (தியாகிகள்) காலம், காலமாக எமது இதயக் கோவிலில் வைத்துப் பூசிக்கபடவேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனித பிறவி அல்ல, அவன் ஓர் இலட்சியவாதி, ஓர் உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், மற்றவர்களின் விடிவிற்காக, விமோசனத்திற்காக வாழ்பவன், சுயநலமற்ற, அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமுள்ள சுகந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தன் உயிரையும் அர்பணிக்க துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணமான பிறவிகள்.

“புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம்”

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலை புலிகள்.